பற்றி எரியும் வளைகுடா : கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல் விமானம்!!

359

கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான விமானங்களை முதலாவதாக இலங்கை விமான நிறுவனமாக ஃபிட்ஸ்ஏர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் காரணமாக பல வான்பரப்புக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல பிராந்திய விமான நிறுவனங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கிடையில், விமான ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளது.

அவசரமாகப் பயணம் செய்ய, குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைய அல்லது முக்கியமான கடமைகளில் கலந்து கொள்ள வேண்டிய பயணிகளுக்கு ஃபிட்ஸ்ஏரின் இந்த நடவடிக்கை நிவாரணத்தையும் வசதியையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலையற்ற சூழ்நிலை இருந்தபோதிலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதற்கு முன்னுரிமை அளித்து, சீரான, நம்பகமான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கு முழுவதும் வான்வெளியில் மோதல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பயணிகள் www.fitsair.com என்ற இணைய தளத்தில் ஒன்லைனில் டிக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயணத் தகவல்களை அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.