இலங்கை கடற்பரப்பில் வெடித்துச் சிதறிய IRIS Dena : ஈரானின் அதிரடி அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றநிலை!!

660

ஈரானியக் கப்பலை மூழ்கடித்ததற்கு அமெரிக்கா மிக மோசமாக வருத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலான தேனாவை அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கியது.

இதனை தொடர்ந்து, அதன் விளைவுகள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் விருந்தினராக சென்றிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், “அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்படும்” என்று அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

நேற்று, வளைகுடாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியமை பதற்றத்தை அதிரகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.