
இலங்கையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைவடைந்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அதன்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (06) தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 406,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.





