நடிகர் விஜய் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் : மனைவி சங்கீதா புதிதாக மனு தாக்கல்!!

25

தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பமாக சங்கீதா புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

சுமார் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தத் தகவல் பிப்ரவரி 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகப் பல ஊடகங்களில் வெளியாகித் தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சங்கீதா தனது மனுவில் விஜய்க்கு எதிராகப் பல்வேறு தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

விஜய் ஒரு பிரபல நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அந்தத் தொடர்பைக் கைவிடவில்லை என்றும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தனக்குப் போதுமான நிதி சுதந்திரம் அளிக்கவில்லை என்றும், சில அடிப்படை வசதிகளைத் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தாங்கள் மனதளவில் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விஜய்யின் நடவடிக்கைகள் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக அந்தஸ்து மற்றும் விஜய்யின் வருமானத்திற்கு ஏற்பப் போதுமான ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும் என்றும், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்திலேயே தான் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சங்கீதாவின் இந்த மனுவை ஏற்றுக்கொண்ட செங்கல்பட்டு நீதிமன்றம், இது குறித்த அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.

அன்று நடைபெறும் விசாரணைக்கு நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

இந்த இக்கட்டான நேரத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல், அவரது அரசியல் பயணத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும், இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.