வவுனியா பஸ் நிலையத்தில் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

764

A6

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பகுதியில் இருந்து கடலாமை இறைச்சியை வாங்கிய ஒருவர் தம்புள்ள செல்வதற்காக பஸ்சில் வவுனியா வந்துள்ளார். வவுனியா பஸ் நிலையப் பகுதியில் உள்ள மலசலகூடத்திற்கு சென்ற போது சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை அழைத்து அவரது பையை சோதனை செய்த போதே மேற்படி கடல் ஆமை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை நீதிமன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.