தளம்பல் நிலையில் தங்கத்தின் விலை : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

38

உலக சந்தையில் இன்று (மார்ச் 9, 2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 5090 முதல் 5110 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையை அடுத்து உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 408000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 377400 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை காணப்படும் போதிலும் நான்கு இலட்சத்தை அண்மித்த போக்கே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.