
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் விலைகள் ஆசிய வர்த்தகத்தில் 30% க்கும் அதிகமாக உயர்ந்து 2022 க்குப் பிறகு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இவ்வாறு எச்சரித்துள்ளார்.
ஜப்பானின் நிதி அமைச்சகம் இன்று ( 9) நடத்திய ஒரு கருத்தரங்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதல் தொடர்ந்து பத்தாவது நாளில் நுழைந்ததால், கச்சா எண்ணெய் விலை 30% க்கும் மேலாக உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $119.50 ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள 10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 40 புள்ளி உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எண்ணெய் விலைகளில் 10% அதிகரிப்பு, ஆண்டின் முழுவதும் நீடித்தால், உலகளாவிய பணவீக்கத்தின் பாரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
எனவே “இந்த புதிய உலகளாவிய சூழலில் கொள்கை வகுப்பாளர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நினைத்துப் பார்க்க முடியாததைப் பற்றி சிந்தித்து எதற்கும் தயாராக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளார்.





