பாப்பரசரின் விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை : ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வருகின்றார்!!

1323

Pop

பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விஜயம் செய்வார் என்று கொழும்பு கத்தோலிக்க திருச்சபை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் பாப்பரசர் வருகையை முன்னிட்டு உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர், அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன் பின்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பௌத்த பிக்குமார் உட்பட சர்வமத தலைவர்கள் கலந்து கொள்ளும் சந்திப்பிலும் பாப்பரசர் கலந்து கொள்ள உள்ளதாக கொழும்பு பேராயர் வணக்கதிற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாப்பாண்டவர் இலங்கையில் பொது ஆராதனைகளை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் பாரியளவில் ஆராதனை நடத்த உள்ளார்.

பிற்பகல் 2.00 மணியளவில் மன்னார் மடு தேவாலயத்தில் மற்றுமொரு ஆராதனை ஒன்றை நடத்த உள்ளார். அதன் பின்னர் 15ம் திகதி இலங்கையில் இருந்து செல்லவுள்ளதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் உறுதி செய்துள்ளார்.