வவுனியா மாவட்டமே இலங்கையில் இரண்டாவது அதிகூடிய சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாகும்!!

636

Kidney

இலங்கையில் சீறுநீரக நோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் வவுனியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பீ. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்திலேயே அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கின்றனர். அந்த மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வடக்கு மாகாணத்தில் உள்ள நான்கு வைத்தியசாலைகளில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் மற்றும் மதவாச்சி வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர். அந்த பிரதேசங்களுக்கு செல்லும் தமிழ் நோயாளர்கள் மொழி பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இதனால் நோயாளர்கள் மாத்திரமின்றி மருத்துவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.