நுளம்புத்திரியால் கணவன் , மனைவி , இரண்டரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்!!

14

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன், ஜெயசித்ரா . இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.

இவர் வழக்கம் போல் நேற்று இரவும் பணி முடித்து கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் இந்த கொசுவர்த்தி சுருள் துணி அல்லது எளிதில் தீப்பற்றக் கூடிய பொருளின் மீது விழுந்து திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து தீ வேகமாக பரவி மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. தூக்கத்தில் இருந்து விழித்த தம்பதிகளுக்கு தீவிபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதில் பார்த்திபன், ஜெயசித்ரா மற்றும் குழந்தை ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.