வீடு முழுக்க இரத்த : ஆறு மனைவி, மருமகள், 6 வயதுப் பேத்தி மூவரையும் ஆயுதத்தால் தாக்கி கொலை : கதறும் மகன்!!

570

ஒடிசா மாநிலத்தின் தேவ்கர் மாவட்டம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, மருமகள் மற்றும் பேத்தியை கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்பகுதியில் மூவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான ரமேஷ் கரியா என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவர், தனது மனைவி, மருமகள் மற்றும் 6 வயது பேத்தியை கனமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். உயிருக்கு பயந்து மருமகளின் அறைக்குள் ஓடிய மனைவியையும் அவர் துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் தீரன், தாய், மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள ரமேஷ் கரியாவை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.