உலக நாடுகளின் முயற்சியால் குறைந்தது ஓசோன் ஓட்டை!!

779

ozone_layer

உலக நாடுகளின் முயற்சியால் ஓசோன் படலத்தின் ஓட்டை குறைந்து வருவதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

ஓசோன் மண்டலத்தில் மேற்புறத்தில் காணப்படும் ஓட்டையானது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.

அதற்கேற்ப அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில் இந்த ஓட்டையானது மிகவும் பெரியதாகக் காணப்பட்டது.

ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஓசோன் படல ஓட்டையின் விரிவாக்கம் குறைந்துள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (World Meteorological Organization) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் சர்வதேச நாடுகள் இணைந்து மேற்கொண்ட தீவிர முயற்சியே ஆகும் என (WMO) உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பின் செயலாளர் மைக்கேல் ஜர்ரார்ட்(Michel Jarraud) பாராட்டியுள்ளார்.