கடற்கன்னியாக மாறிய 19 வயது இளம்பெண்!!

649

பிரித்தானியாவில் 19 வயது இளம்பெண் ஒருவர், பிரித்தானியாவின் முதல் தொழில்முறை கடற்கன்னி என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

எமிலி (Emily) என்ற அந்த பெண் தனது உடலில் 6 அடியில் ஒரு மீன் வாலை தானாகவே செய்து தன் உடலில் இணைத்து கடற்கன்னி போல நீச்சல் பழகி வந்துள்ளார்.

தினமும் 4 மணி நேரம் பயிற்சி செய்துவந்த இவர் இதனை ஒரு தொழில்முறையாகவே போற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது பழைய ஆடைகளை ஒன்று சேர்த்து நீலம் மற்றும் பச்சை நிறத்தில் அழகான ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

மேலும் இவர் முழுதாக மீனின் வடிவத்தை பெற வேண்டும் என்பதற்காக தனது தலைமுடிக்கு சிவப்பு வண்ணம் பூசியுள்ளார்.
தற்போது இவர் தனது பட்டபடிப்பை விட்டுவிட்டு நடிப்பிலும், கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

எமிலி இதுகுறித்து கூறுகையில், தனது சிறு வயதிலிருந்தே இந்த ஆசை இருந்ததாகவும், அதனால் தான் இதை பயிற்சி செய்ய தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடற்கரை சுற்றுசூழல் மற்றும் சுகாதாரத்திற்கு ஆதரவாக எமிலி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

K1 K2 K3