உதயநிதி பற்றி காஜல்அகர்வால் சொல்லும் புதுக் கதை!!

980

Kajal

சமீபத்தில் படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக கொடுத்த 40 லட்சத்தை தர மறுப்பதாக நடிகை காஜல் அகர்வால் மீது நடிகரும், பட அதிபருமான உதயநிதி ஸ்டாலின் புகார் கொடுத்து இருந்தார்.

உதயநிதி அளித்த 40 லட்சம் மோசடிப் புகாருக்கு பதிலளிக்குமாறு காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை அறிந்த காஜல் அகர்வால் தன் தரப்பில்ருந்து ஒரு புது கதை சொல்கிறார்.

அதாவது நண்பேன் டா படத்துக்காக என்னை முதலில் ஒப்பந்தம் செய்தார்கள் . சரி நானும் அவர்களுக்காக ஜனவரி மாதத்தில் 20 நாட்களை கொடுத்தேன். ஆனால் படபிடிப்புக்கு செல்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் உங்களுக்கு பதிலாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்து உள்ளோம், அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது உங்களுடைய முந்திய படமான அழகு ராஜா சரியாக போகததால் இந்த முடிவு என்றனர்.

ஆனால் எங்கள் கம்பெனியில் அடுத்த சில படங்களில் நீங்கள் நடிப்பீர்கள் என்று வாக்கு உறுதி கொடுத்து அதில் உங்களுக்கு கொடுத்த அட்வான்ஸ்சை கழித்து கொள்ளலாம் என்று சொன்னார்கள் காஜல் அகர்வால் தெரிவித்தார்.

ஆனால் உதயநிதி தரப்பில் இதை பற்றி கேட்ட போது இந்த விஷயத்தை நான் சுமுகமாக முடிக்க நினைக்கிறேன என்று ஒரு வரியில் முடித்தார்.