வீழ்ச்சிப் பாதையில் தங்கத்தின் விலை : இலங்கையில் இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்!!

45

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தங்க விலை 1.2 சதவீதம் சரிந்து 5019 டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் 13 உடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் (17.03.2026) தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.