கடன் தொல்லையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் : பொலிஸார் தீவிர விசாரணை!!

16

கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்ற(16.03.2026) இடம்பெற்றள்ளது.

பட்டிணசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி உயிர்மாய்த்து கொண்டுள்ளார். அதன் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.