எரிபொருள் விலைகளில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்!!

194

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, இன்று அல்லது நாளையதினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படாது என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது இணைச் செயலாளர் சாந்த டி சில்வா இதை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை உயர்த்தப்படும் என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு விடுவிக்கப்படும் போது விலை உயர்த்தப்படும் என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாக அவர் கூறினார்.

அதற்கமைய, இந்த விலை உயர்வு நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறும் என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.