காணாமல் போன நான்கு வயதுச் சிறுமி கண்டுபிடிப்பு : இருவர் கைது!!

578

Baby

குருணாகல் கனேவத்தையில் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த நான்கரை வயதான பமாரா கேஷனி பண்டார, கடந்த ஒன்பதாம் திகதி காணாமல் போயிருந்தார்.

தீவிரமாக இடம்பெற்ற தேடுதலில் குறித்த சிறுமி, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலில் கும்புகெட்டே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4.20 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தகவலின் அடிப்படையில், பொலிஸாரும் மக்களும் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பின் பின்னரே சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவ்வீட்டிருந்த தாயும் அவருடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.