இலங்கையில் இன்று தங்கத்தின் விலை பாரியளவு சரிவு : எவ்வளவு தெரியுமா?

1517

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று 10,000 ரூபாவால் குறைந்துள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,475 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.