தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் : குறைந்த வேகத்தில் சடுதியாக அதிகரிக்கும் பெறுமதி!!

233

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (25.03.2026) ஒரே நாளில் 8000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை உலக தங்க சந்தையில் இன்று உயர்வு போக்கு அவதானிக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலையில் தங்க விற்பனை 2.94 வீதத்தால் உயர்ந்து 4,539.52 டொலர்களாக நிலவியுள்ளது.