வவுனியாவில் கலாசாரத்தை பேணும் விழிப்புணர்வு ஊர்வலமும் நாடகம்!!

1070

vavu

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கலாச்சாரத்தை பேணும் வகையிலுமான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடகம் நேற்று சனிக்கிழமை வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

“எங்கள் தோல்களில்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த வீதி ஊர்வலம் மற்றும் வீதி நாடத்தினை வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகம் ஒழுங்கமைப்பு செய்திருந்தது.

இளம் தலைமுறையினர் மத்தியில் கலாசார சீரழிவுகளை போக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த இவ் விழிப்புணர்வு நாடகத்தினை திருமறைக்கலா மன்றத்தின் இளைஞர் குழுவினர் வழங்கியிருந்தனர்.

இதன்போது தற்போதைய காலச் சூழலில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நாகரீக மோகத்தினால் ஏற்படும் கலாசார சீரழிவுகள் தற்கொலைகளுக்கான காரணிகள் போன்ற விடயங்களை எடுத்தியம்பியம்பப்பட்டன.