வவுனியாவில் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் வவுனியா மாவட்ட மாதர்,கிராம அமைப்பின் பிரதி நிதிகளுக்கிடையில் சந்திப்பு!!

610

வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் வவுனியா மாவட்ட மாதர்,கிராம அமைப்பின் பிரதி நிதிகளுக்கிடையில் சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் ஒவ்வொரு கிராம அபிவிருத்தி சங்கங்களும் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பங்கெடுத்து மாவட்டத்தையும் எமது மாகாணத்தையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய வசதியாக விற்பனை நிலையம் ஒன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,எஸ் வினோ நோகராதலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

D1 D2 D3 D4