அதிகரிக்கிறது மின் கட்டணம் : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

134

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 30 அலகுகளுக்கு 15 ரூபாயினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 45 ரூபாயினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 120 ரூபாயினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 420 ரூபாயினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு : மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் (30.03.2026) அறிவிப்பொன்று வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தப் புதிய கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள ஒரு சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.