மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை – இலங்கையில் பதிவாகியுள்ள திடீர் மாற்றம்!!

231

இலங்கையில் இன்று (30.03.2026) காலை நிலவரப்படி, தங்க விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது

முதலாம் இணைப்பு

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (30.03.2026) தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,511.85 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 70.33 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை நிலவரம்

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (30.03.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 358800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 390000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி கடந்த 28ஆம் திகதி நிலவரத்தை இன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது விலை மாற்றமின்றி தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.