
மின்வெட்டு ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(30.3.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதாக இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மின்சார வாரியத்தின் (CEB) உறுதிமொழியை கருத்தில் கொண்டு, தற்போதைக்கு எந்த மின்வெட்டும் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் நிலவும் தற்போதைய மின் உற்பத்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது மின்சார தேவைகளைப் பகல் நேரங்களில் நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் மின் கட்டணத்தையும், நாட்டின் உற்பத்திச் செலவையும் குறைக்க முடியும் என்று இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.





