வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரினால் விபத்துக்குள்ளான டிப்பர் : உடைந்த மின்சார தூண்!!

18

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தினை அண்மித்த பகுதியல் போக்குவரத்து பொலிஸாரின் அசமந்த போக்கினால் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.

வவுனியா – இராசேந்திரகுளம் பிரதான வீதியில் பாரதிபுரம் கிராமத்தினை அண்மித்த பகுதியில் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதை வளைவு காணப்படுகின்றது.

அப்பகுதியில் கடமையிலிருந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தினை வீதி வளைவில் வைத்து மறித்துள்ளனர். டிப்பர் சாரதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கிணங்க வாகனத்தினை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.

எனினும் அப்பாதையானது ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதை வளைவு பாதை என்பதினால் வாகனம் பாரத்துடன் நின்றதாலும் டிப்பர் வீதியில் தானாக நகர்ந்து சென்று மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்துள்ளானது.

டிப்பர் சாரதி கீழே இறங்கி நின்றமையினால் எவ்வித உயிராபத்துகளும் இடம்பெறவில்லை என்பதுடன் டிப்பர் வாகனத்தின் முன் பகுதி சிறிதளவு சேதமடைந்திருந்ததுடன் மின்சார கம்பம் முழுமையான சேதமடைந்திருந்தது. இதனால் அப்பகுதிக்கான மின்சாரமும் முற்றாக பாதிப்படைந்திருந்தது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் டிப்பரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.