வவுனியாவில் கலைப் பிரிவில் சாதனை படைத்த மாணவி!!

150

வவுனியா அல் அக்ஸா மகாவித்தியாலய மாணவி வெளியாகிய உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கலைப் பிரிவில் மாவட்டத்தில் மூன்றாம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா புதியசாளம் பைக்குளத்தில் வசிக்கும் ஐதுறூஸ் முஸ்தகீம், ஜாஹிறா தம்பதிகளின் புதல்வி பாத்திமா சனா கலைப் பிரிவில் தமிழ், புவியியல், அரசியல் ஆகிய பாடங்களைக் கற்று 3A சித்திகளைப் பெற்று வவுனியா மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை பெற்றுள்ளார். இவர் அல் அக்ஸா மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவியை வழி நடத்திய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.