வவுனியாவில் தீ விபத்து : 10 ஏக்கர் காடு அழிந்து நாசம்!!

928

Forest

வவுனியா, இரட்டைப் பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 10 ஏக்கர் காடு அழிந்துள்ளது.

இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுக்கு எவராவது தீ வைத்தனரா அல்லது எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.