வவுனியா கணேசபுரம் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட 6 பேர் கொண்ட மட்டுபடுத்தப்பட்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் (14.09) நிறைவுக்கு வந்தது.
இறுதிப்போட்டியில் சார்ள்ஸ் அணியினரும் ப்ரெண்ட்ஸ் அணியினரும் மோதிக்கொண்டனர். முதலில் துடுப்பெடுத்தாடிய சார்ள்ஸ் அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக் களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றது. பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ப்ரெண்ட்ஸ் அணி 4.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 51ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இவ் ஆட்டத்தில் ஆட்டநாயகனாக சார்ள்ஸ் அணியை சேர்ந்த சசி அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகன் ஆக உதயதாரகை அணியை சேர்ந்த தர்மசீலன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னைநாள் வவுனியா உப நகர பிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் சிறப்பு விருந்தினாராக கணேசபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு.சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டனர்.






