காதலிக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய கொடூரக் காதலன் : தாங்க முடியாமல் இளம்பெண் விபரீத முடிவு!!

19

தெலங்கானா மாநிலத்தில் காதலி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த ரத்தத்தைச் செலுத்தி கொலை செய்ய முயன்ற காதலனின் வெறிச்செயல் தற்போது ஒரு உயிரைப் பறித்துள்ளது.

கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று மனோகர் என்ற இளைஞர், தனது காதலியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் அவர் உடலில் செலுத்தியுள்ளார்.

இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்த இளம்பெண் கடும் மனவேதனைக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளார்.

தான் நேசித்தவனே இப்படி ஒரு கொடூரத்தைச் செய்துவிட்டானே என்கிற ஆத்திரத்திலும், இனி தனது வாழ்க்கை அவ்வளவுதான் என்கிற விரக்தியிலும் இருந்த அந்த இளம்பெண், இன்று (ஏப்.10) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

உயிருக்குப் போராடிய நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்த இளைஞனின் மிருகத்தனமான செயல் ஒட்டுமொத்த தெலங்கானாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருந்த மனோகரைத் தேடி வருகின்றனர். ஒரு உயிரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக எய்ட்ஸ் ரத்தத்தைப் பயன்படுத்திய காதலனின் செயல், நவீன கால ‘சைக்கோ’ தனமாகப் பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு மறுத்ததற்காக இப்படி ஒரு கொடூரமான முடிவைத் தேடிக்கொடுத்த காதலனுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.