
கடந்த மாதம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
வவுனியா வடக்கு, பெரியமடு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய துசிந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த மாதம் பெரியமடு – சின்னடம்பன் பிரதேசத்தில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





