கலிபோர்னியாவில் இந்தியருக்கு நேர்ந்த சோகம் : சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!!

7

அமெரிக்காவில் 26 வயது இந்திய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் சிங்கிரெட்டி சாய் ஶ்ரீஹரிகிருஷ்ணா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த ஶ்ரீஹரிகிருஷ்ணா சில மாதங்களுக்கு முன்பு செயிண்ட் லூயிஸ் நகரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை தனது 26 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் நீர் வீழ்ச்சிக்கு சென்று இருந்த போது வலுவான நீரோட்டத்தால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இறுதியில் ஶ்ரீஹரிகிருஷ்ணா உடலை மீட்டெடுத்துள்ளனர். ஶ்ரீஹரிகிருஷ்ணா உயிரிழந்த சம்பவம் அறிந்து ஆந்திராவின் சொந்த ஊரில் உள்ள அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து ஶ்ரீஹரிகிருஷ்ணா உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அங்குள்ள இந்திய சமூகத்தினரும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.