இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை!!

669

Milk

இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மீள அறிவிக்கும் வரையில் ஊடகங்களில் பால்மா தொடர்பான விளம்பரங்களை பிரச்சாரம் செய்யக் கூடாது.

இது தொடர்பில் ஊடக நிறுவனத் தலைவர்களிடம் எழுத்து மூலம் கோரியுள்ளோம். பால்மா விளம்பரங்களின் போது தேவையற்ற தூண்டுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக விளம்பரங்களுக்கு தடை விதிக்க தீர்மானித்தோம்.

தேவையற்ற தூண்டுதல்களில் ஈடுபடும் சகல பால்மா விளம்பரங்களையும் பட்டியல்படுத்தி ஒழுங்கு செய்யும் வரையில், பால்மா விளம்பரங்களை தற்காலிக அடைப்படையில் ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளதாக பாலித மஹிபால அறிவித்துள்ளார்.