புத்தாண்டில் கோர விபத்து – குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி!!

236

தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்ற ஏற்பட்ட கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை, வெலிகம பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிபிட்டிய நோக்கித் தனது சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்ததாக நபரை பின்னால் அதிவேகமாக வந்த வேன் ஒன்று மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன், வீதியோரம் இருந்த வீடொன்றின் பாதுகாப்பு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் காரணமாக சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இவ்விபத்து காரணமாக குறித்த வேன் மற்றும் வீட்டின் பாதுகாப்பு மதில் ஆகியவற்றுக்குக் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வேனின் முன்பகுதி பெருமளவில் நசுங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு மதிலும் இடிந்து விழுந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தின் போது வேனை செலுத்திய பெண் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.