ஐரோப்பாவுக்கு தப்பியோட முயன்ற இலங்கையர் : இந்திய பொலிசாரினால் கைது!!

471

ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பிச் செல்வதற்காக விசா பெற முயன்றபோது, ​​கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான ராஜுவை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது தொடர்பில் இந்தியப் பொலிஸார், இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். சந்தேக நபரான ராஜு, இலங்கையில் 15 குற்றங்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவராகும்.

கரந்தெனிய சுத்தாவின் உதவியுடன் அவர் டுபாய்க்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்லும் நோக்கத்தில், ராஜு சில நாட்களுக்கு முன்பு டுபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். அதற்கமைய, அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.