இந்தியாவின் உயர்ந்த குடும்பம் : 5 வயதில் 5 அடி சிறுவன்!!

960

Boy

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 5 வயதிலேயே, 5 அடி 7 அங்குலம் உயரத்தை அடைந்ததால் கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளான்.

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ஸ்வெட்லானா சிங் (25) என்ற பெண் 7 அடி 2 அங்குலம் உயரமாக இருந்ததால், கடந்த 2012ம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தார்.

பின்னர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 அடி 2 அங்குலம் உயரமான சித்தீகா பர்வீன் என்ற பெண் ஸ்வெட்லானாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்வெட்லானா கல்லூரியில் படிக்கும்போது 6 அடி 6 அங்குலம் உயரமான சஞ்சய் என்பவர் காதலித்ததையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து இவர்களுக்கு பிறந்த மகன் கரண் சிங், 2 வயதாகும்போதே 4 அடி 5 அங்குலம் உயரத்தை அடைந்துள்ளார்.

மேலும் தற்போது 5 வயதாகும் கரண் 5 அடி 7 அங்குலம் வளர்ந்துள்ளதால் சிறுவயதில் அதிக உயரத்தை அடைந்ததற்காக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளார்.