அவதானமாக செயற்படவும் : பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!!

191

வளிமண்டலவியல் திணைக்களம் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.