சவுதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மாதங்களின் பின் இலங்கையை வந்தடைந்தது!!

963

Saudiசவுதி அரேபியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான கண்டி பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசத்தை சேர்ந்த நயனாகுமாரி ஜயசூரிய என்ற 28 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2013.10.29 ஆம் திகதி, சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இது தொடர்பில் மேற்படி பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளதாவது,

எனது மனைவி சவுதி அரேபியாவுக்கு சென்று மூன்று மாதங்கள் எதுவித பிரச்சினைகளின்றி வேலை செய்தார். அதன்பின் வீட்டின் உரிமையாளர் துன்புறுத்துவதாக அவர் என்னிடம் பலமுறை தொலைபேசியில் கூறினார்.

இதுதொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நான் முறைப்பாடு செய்தேன். ஆனாலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு சென்றபோது, எனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறினார்கள்.

எனது மனைவி தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது சடலம் ஐந்து மாதங்களுக்கு பின்பே அனுப்பப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரியவர்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுக்கமாறு சம்பந்தப்பட்ட தரப்பிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். மேற்படி பெண்ணுக்கு முறையே 11, 6 வயதில் இரு மகன்மார்கள் உள்ளனர்.