பழிக்குப் பழி : மகள் கொலைக்கு காரணமானவரை வெட்டிச் சாய்த்த தந்தை!!

15

தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் காவியா என்ற ஆசிரியை அவர் காதலித்த அஜித்குமார் என்பவரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித்குமார்,

சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் வெளியே வந்த தகவலையறிந்த காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்து அவரை பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வந்த அஜித்குமாரை வழிமறித்த காவியாவின் தந்தை உள்ளிட்ட கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.

இந்த பயங்கர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் தஞ்சை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தற்போது சரணடைந்துள்ளனர். பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளைக் கொன்றவனை சட்டத்தின் முன் நிறுத்துவதை விட நேரடி தண்டனை வழங்க தந்தை முடிவெடுத்தது அந்த பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.