மன்னாரில் துயரம் : விளையாட்டு வீரர் விபரீத முடிவு!!

155

மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது.

இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டியின் சிறந்த ஒரு பின்கள வீரராக செயல்பட்டு சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த குறித்த இளைஞன் எதற்காக இவ்வாறான முடிவினை எடுத்தார் என்பது இன்னும் அறியப்படவில்லை.

தமிழர் பிரதேசங்களில் விபரீத முடிவால் பலியாகும் இளையோரின் எண்ணி்க்கை திடீரென அதிகரித்து வருகின்றமை சமூக ஆர்வலர்கள் இடியே கவலையை தோற்றுவித்துள்ளது.