வவுனியா தோணிக்கலில் புகையிரதம் மோதி முதியவர் உயிரிழப்பு!!

1400

வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று(28.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் தீவிரத்தினால் குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.