
நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (29.04.2026) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, எச்சரிக்கை அறிவிப்பு (29.04.2026) இன்றிரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேற்கு, சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொருந்தும்.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




