கோழிக்குழம்பு கேட்ட கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி!!

8

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், கோழிக்குழம்பு வேண்டும் என கேட்டு அடம்பிடித்த கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்றுள்ளார் ஒரு பெண்.

தெலங்கானா மாநிலத்திலுள்ள கமரேட்டி என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கோதண்டம் சிவாஜி (28) என்பவர், தன் மனைவியான லக்‌ஷ்மி தனக்கு கோழிக்குழம்பு செய்துகொடுக்கவில்லை என்று கூறி அவரிடம் சண்டைபோட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்ற, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் வந்து சண்டையை நிறுத்த முயன்றுள்ளார்கள். இருந்தாலும் சண்டை வலுக்க, லக்‌ஷ்மி பக்கத்திலிருந்த அரிவாளை எடுத்து கணவனின் கழுத்தில் அடித்துள்ளார்.

கீழே விழுந்த சிவாஜியின் தலையில் பலமாக அடிபட, ஏராளமான இரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அவர். தகவலறிந்து வந்த பொலிசார் லக்‌ஷ்மியை கைது செய்துள்ளார்கள்.

ஒரு கோழிக்குழம்பால் உருவான சண்டை கொலையில் முடிய, தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், தந்தையையும் இழந்து தாயையும் பிரிந்து எதிர்காலம் தெரியாமல் வாழும் நிலை பிள்ளைகளுக்கு உருவாகியுள்ளது.