யாழில் வீதியில் கிடந்த தங்க நகை : உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

410

யாழில் வீதியில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து சுன்னாகம் பொலிஸார் ஊடாக உரியவரிடம் சேர்த்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (28.04.2026) சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்பாக தங்க ஆபரணமொன்று கீழே விழுந்து காணப்பட்டுள்ளது.

குறித்த தங்க ஆபரணத்தை கண்டெடுத்த குப்பிளான் பகுதியை சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்பவர் அதனை சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன்பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த நகையின் உரிமையாளரான ஏழாலை பகுதியை சேர்ந்த முதியவரை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த முதியவரை அழைத்து நகையை கண்டெடுத்த பார்த்தீபன் ஊடாக முதியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு நகையை நேர்மையாக உரியவரிடம் சேர்த்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.