வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

623

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, வீட்டின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.