பழிவாங்க மருத்துவமனைக்கு வந்த நாகப்பாம்பு : உண்மைச் சம்பவம்!!

637

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், வாலிபர் ஒருவரைக் கடித்த நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே தேடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொய்யல கவுடேனியைச் சேர்ந்த சிவ சீனிவாஸ் என்பவர் நேற்று காலை நாகப்பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, ஜங்கா ரெட்டி குடேம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் அவரை கடித்த அதே நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டின் முன்பாகத் தோன்றியதைக் கண்டு அங்கிருந்த ஊழியர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர். கடித்த பாம்பே நோயாளி இருக்கும் இடம் தேடி வந்த வினோத நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.