
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாகப் பிறந்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளைப் பார்வையிடுவதற்காக, தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை (01) நேரில் விஜயம் செய்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிங்கக் குட்டிகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்தன.
பணிப்பாளர் நாயகம் தனது விஜயத்தின் போது, குட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கிய நிலையை மீளாய்வு செய்ததுடன், அவற்றைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்களுடனும் சிநேகப்பூர்வமாக உரையாடினார்
புதிதாகப் பிறந்துள்ள இந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் பொதுமக்கள் தினமும் காலை 10:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இயற்கையான சூழலில் வனவிலங்குகளின் அழகை இரசிக்குமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.




