கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியை : விசாரணையில் வெளியான தகவல்!!

533

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் இறந்த மறுநாள் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர பண்டாரகம, வீதியகொட, கனத்கொடவைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மொரகஹஹேன பகுதியில் உள்ள ஆரம்பப்பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை ஒரு குழந்தையின் தாய் என்றும், அவரது கணவர் பிரபல பாடசாலையொன்றின் தலைமை நடன ஆசிரியர் என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.