யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த சோகம்!!

219

யாழில் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (01.05.2026) பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.