தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு சாதகமான செய்தி!!

36

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05.05.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4521.09 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் மேலும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (04.05.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 4000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.